Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய வங்கிகளில் பணத்தை வைப்பிடுதல் பாதுகாப்பானதா?

cyprusBankஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான சைப்பிரஸ் தீவின் இரண்டு பெரும் வங்கிகள் திவாலாகும் நிலையிலுள்ளன. அவற்றைத் தற்காலிகமாகப் பாதுகாப்பதற்கு 13 மில்லியன் டொலர் பணம் தேவை என சைப்பிரஸ் அரசு ஏனைய உறுப்பு நாடுகளிடம் கையேந்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் 13 மில்லியன் பணத்தை வழங்குவதற்கு நிபந்தனை விதித்துள்ளது. வங்கிகளில் பணத்தைச் சேமித்து வைத்திருக்கும் உழைக்கும் மக்க்க்டளின் சேமிப்புப் பணத்திலிருந்து பத்து வீதமான பணத்தை வங்கிகளை மீட்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

மக்களின் வரிப்பணத்தில் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பணம் வங்கிகளுக்கு மீட்புப்பணமாக வழங்கப்பட்ட போது அப்பணம் மக்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டது. இன்று வரை அது நடைபெறவில்லை. சைபபிரஸ் மக்களின் சேமிப்புப் பணம் இன்னும் சில நாட்களில் வங்கிகளுக்கு வழங்கப்படுவதும் அதனை பல்தேசிய நிறுவனங்கள் சுருட்டிக்கொள்வதும் நடைபெறலாம்.

நேற்று சனியன்று விடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை சைப்பிரஸ் பாராளுமன்றம் நாளை விவாதிக்கும். சைப்பிரசிற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை என அந்த நாட்டின் புதிதாகத் தெரிவான ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version