இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்கா, தனது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்திருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்தது.
எவ்வாறாயினும் வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக அந்த யோசனைக்கு குறித்து கவனம் செலுத்த அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.’
என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் போர்க்குற்றப் பொறிமுறை முக்கியமான போர்க்குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்கா தோற்றுவித்த உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு நிறவெறி அரசின் கோரமான கொலையாளிகளைப் பாதுகாக்கவும், ஆயுதமேந்திய போராளிகள் பலரைத் தண்டிக்கவும் உதவியது. நிறவெறி அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியதன் காரணமாகத் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் கறுப்பின ஆபிரிக்கர்கள் கிளார்க்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையற்ற மன்னிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகளதும், அமெரிக்க அரசினதும் உதவியோடு நடத்தப்பட்ட இந்த விசாரணை பெரும் பணச்செலவில் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவாரவிருந்து ஐரோப்பிய அடியாளாக மாறிய நெல்சன் மண்டேலா போர்க்குற்றவாளிகளை விசாரணை என்ற பெயரில் காப்பாற்றி உலகவங்கிக்கும் ஐ.எம்.எப் இற்கும் பல்தேசிய வியாபாரிகளுக்கும் நாட்டையும் மக்களின் தியாகங்களை விற்பனை செய்தார். இந்த நன்றிக்கடனுக்காக மண்டேலாவின் மரணச்சடங்கில் உலகின் ஒடுக்கும் நாடுகள் அனைத்தும் கலந்துகொண்டன. மண்டேலாவிம் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு மரணச்சடங்கில் கிழிந்து தொங்கியது.
இன்று இலங்கையில் தென்னாபிரிக்க மாதிரியைப் பயன்படுத்திப் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கை அரசைக் காப்பாற்ற அதன் எஜமானர்களான ஏகபோக அரசுகள் முயலும் என்பதை சம்பந்தன் எதிர்வு கூறுகிறார்.
ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனை ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசு நோர்வே போன்ற நாடுகளின் உதவியோடு தென்னாபிரிக்காவின் அதே விசாரணை முறையை நடைமுறைக்குக் கொண்டுவரும். எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு விசாரணை நடைபெறும். இந்த இடைக்குள் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் அரசியல் கோமாளிகளும் வியாபாரிகளும் மக்களைப் போராடவிடாமல் தங்கள் கட்டுப்பாட்டுகுள் வைத்துக்கொள்வார்கள். புலியெதிர்ப்பு – அரச பாசிச ஆதரவுத் தமிழர்கள் இலங்கை அரச புகழ்பாடிக்கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைக்கும். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இனச்சுத்திகரிப்புன் ஊடாக இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படும். மாண்டுபோன தமிழர்களின் மரணச்சடங்குகளை நடத்திக்கொண்டு தமிழ்த் தேசியம் வாழ்கிறது என்று புதிய கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்தும்