Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றம் இழைத்த சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி : ராமதாஸ்

தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிங்கள அரசின் படுபாதக செயல்களை கண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து எழுந்த குரல்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு தற்போது சிங்களப் படையினருக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். தமிழர்களை கொன்றுகுவித்து போர்க்குற்றம் இழைத்த சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல். எனவே சிங்கள வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்தி அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version