Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொய்யுரை புகழுரையை நான் கேட்க விரும்பவில்லை- அதிகாரிகளிடம் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பதவியேற்றுள்ள அரசுக்கு இது பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக இன்று பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன், கே.என் , நேரு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கொரோனா பணிகளில் அரசு முறையாக செயல்படவில்லை. தனக்கு உண்மை நிலவரம் தெரியவேண்டும் என்பதை ஆரம்பம் முதலே சொல்லி வந்த ஸ்டாலின் ஒரு கட்டத்தில் அதிகாரிகளிடம் “கொரோனா 2-வது அலையால் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுத்தால் கொரோனா அலையை தடுக்க முடியும். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே பொய்யுரை, புகழுரையை நான் கேட்க விரும்பவில்லை. அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். மேலும் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 என்ற அளவில் உள்ளது. எனவே நோய் பாதிப்புக்கு ஏற்ப படுக்கை வசதி ஆக்சிஜன் வசதி தேவைபடுகிறது. அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்” என வலியுறுத்தினார்.

Exit mobile version