Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொம்மை நாடகம் ஆடுகிறார் மோடி- ராகுல்காந்தி!

இந்திய அரசியலிலும் தொலைக்காட்சிகளிலும் திடீரென விவாதத்திற்குள்ளாகி இருக்கும் ஒரு விவகாரம் பொம்மை. ஆமாம் உலக அளவில் பொம்மை தயாரிப்பதில் இந்தியா பின் தங்கியிருக்கிறது என்பதுதான் அந்த விவாதம்.

இந்திய சந்தைகளில் பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது சீன பொம்மைகள்தான். விலை குறைவாகவும் தரமாகவும் இருப்பதால் சீன பொம்மைகளையே பெற்றோர்கள் பெரும்பாலும் வாங்குகின்றனர்.  இந்நிலையில் பொம்மை தயாரிப்பதில் இந்தியா முன்னேற வேண்டும் என நினைத்த பிரதமர் மோடி ‘டாய்கேத்தான் -2021’ என்ற பெயரில் பொம்மைகள் தயாரிப்பாவர்களுடம் ஒரு உரையாடலை நடத்தினார். அதில் “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று பேசினார்  பிரதமர் மோடி.

நாடே கொரோனா தொற்றால் அல்லல்பட்டு அதற்கு உரிய தடுப்பூசிகளும் இல்லாமல் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் பொது பொம்மைகள் தயாரிப்பு பற்றிய ஆலோசனையின் ஈடுபட்ட மோடியின் செயலை காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்.

“குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என கடுமையாகச் சாடியுள்ளார் ராகுல்காந்தி.

Exit mobile version