முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
சந்தேகங்களின் அடிப்படையில் மட்டுமே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி கணவர் முருகன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் பேரறிவாளன் 1200க்கு 1096 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் நளினி கணவர் முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தூக்குத் தண்டனை ரத்து செய்யக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.