Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் : லெனின் மதிவானம்

1950 களுக்கு பி;ன்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா – ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன.

1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பூசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. 

 இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும் இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தாரகள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.

இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.

1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஷஷதேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த – உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று.

 வௌவேறு வடிவத்திலும் உருவத்திலும் இலககிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்’

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும்,. ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்ன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன.

இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்ளை வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி.

01. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியூகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்;ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புததுயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது'( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)

இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்ற்ததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியி; செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.

அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.

இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்;த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.

மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.

இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர பெரும் முயற்சியெடுத்திருந்தார்.

இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்ரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிககு விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.

அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்நனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.

உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார்.

இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. ‘பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.

இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. ஆதனை மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்.

Exit mobile version