Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேச்சுவார்த்தை தோல்வி- குடியரசு தினம் அன்று  டிராக்டர் பேரணி!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. இன்று நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய 26-ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி கட்டாயம் நடக்கும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளார்கள்.

விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயச் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கிறோம். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று மத்திய அரசு கேட்க , விவசாயிகளோ மூன்று வேளாண்சட்டங்களையும் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று விட்டார்கள்.

இதனால் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி போராட்டம் தீவிரமடையும் என்று தெரிகிறது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததோடு காவல்துறையே இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னது. இப்போது இந்த போராட்டத்தில் கலவரம் வெடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் புகுந்து இந்துத்துவ அமைப்பினர் கலவரம் செய்து பின்னர் அது டெல்லி முழுமைக்கும் பரவி 50-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்படவும் காரணமாக அமைந்தது.  அதே பாணியில் டிராக்டர் போராட்டத்திற்குள் சில ஆயுதமேந்திய நபர்கள் ஊடுறுவி கலவரத்தை உண்டாக்க சதி செய்திருப்பதாக விவசாயிகள் சந்தேகிக்கிறார்கள்.

Exit mobile version