Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து மரணம்!

பெரியாரின் தொண்டரும் திராவிட இயக்க சிந்தனையாளரும், இடதுசாரி செயற்பாட்டளாரகவும் தன் வாழ்வை கழித்து வந்த வே.ஆனைமுத்து முதுமை காரணமான மறைந்தார்.

(பிறப்பு: ஜூன் 21, 1925) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.

பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள் மலர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை தொடங்கியவர், இன்றுவரை ‘சிந்தனையாளன்’ இதழை நடத்தி வருகிறார். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள்வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.பெரியாருக்கு நெருக்கமாக இருந்த வே.ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளை தொகுத்துநூலாக்கும் பணியைத் தொடங்கினார். ‘சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து’, ‘தீண்டாமை நால்வருஎம்.ணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

‘பெரியார் – ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை விரிவாக்கம் செய்து சமீபத்தில் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு 1976-ல் ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1988-ல் இந்த அமைப்பை ‘மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று மாற்றி இன்றுவரை அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தோடு நிற்காமல் பெரியாரிய கருத்துகளைப் பரப்ப நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்துவந்தார். தமிழகத்தைப் போல வடமாநிலங்களிலும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங்,கன்சிராம் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தினார்.

பிஹாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது, மண்டல் கமிஷன் உருவாக்கம், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது, வட மாநிலங்களில் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தியது என்று வே.ஆனைமுத்துவின் சாதனைகளை பெரியாரிய சிந்தனையாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

Exit mobile version