Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார்,அண்ணா, கலைஞருக்கு சென்னையில் சிலை வேண்டும்!

பெரியார் அண்ணா கலைஞர் மூவருக்கும் சென்னை மெரீனாவில் பிரமாண்ட சிலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையும் கட்டமைப்பையும் சீமானிடம் இருந்தோ அல்லது அவரது சித்தப்பாவிடம் இருந்தோ திராவிட இயக்கம் களவாடவில்லை. சீமான் தான் துவக்கத்தில் பெரியார் திராவிட இயக்கம் எனப் பேச ஆதரவுத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்ட பின்னர் இந்துத்துவ சக்திகளின்  கைக்கூலியாக மாறிப் போனார்.

இன்று நாம் தமிழர் கட்சியின் கருத்துக்களும் பாஜக இந்துத்துவசக்திகளின் கருத்துக்களும் ஒரே கோட்டில் பயணிக்கிறது. அரசியல் களத்திலும் சமூகக் களத்திலும் நாம் தமிழர் பாஜகவை அனுசரித்தே அரசியல் செய்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை பல தொகுதிகளில் யாரை நிறுத்த வேண்டும் என்று சொன்னது பாஜக. உதாரணத்திற்கு கோவை  தெற்கு தொகுதியில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டிய முஸ்லீம் வாக்குகளை தடுத்து வானதியின் வெற்றிக்கு துணை நின்றவர் சீமான். இதை மறுக்க முடியுமா?

சரி, தமிழ்நாடு அறிஞர் அண்ணா பெற்றுக் கொடுத்தது. பெரியாரின் சிந்தனைகளையே தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களாக செயல்படுத்தியது. கடவுள் மறுப்பு என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் கூட கிராமப்புறங்கள் பற்றி அவர் சொன்னக் கருத்துக்களை உள்வாங்கி 40 ஆண்டுகளில் கிராமங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றி வைத்திருப்பதைக் காண முடியும். சீமான் போன்ற மோடியின் எடுபிடிகளுக்கு பெரியார் என்ற சொன்னாலே ரத்தம் கொதிக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெரியாரின் செல்வாக்கு அதிக அளவில் பரவிச் செல்வதை நாம் பார்க்கிறோம்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் செலவில் பெரியாருக்கு சிலை வைப்பதாக ஒரு பொய்யை வதந்தியாக பரப்பியிருக்கிறார் சீமான். உண்மையில் சிலை வைப்பது பெரியார் சுயமரியாதை இயக்கம் என்ற தனியார் அமைப்பு. இது திராவிடர் கழகத்தின் அமைப்பு. அவ்வமைப்பு அவர்களின் தலைவருக்காக நிறுவும் சிலையை அரசு நிறுவுவதாக  இந்துத்துவ கும்பலுக்கு கருத்தியல் ஆதரவை வழங்கியிருக்கிறார் சீமான்.

சரி சீமானையும் இப்படி கேண்டில் பண்ணுவது தவறு. சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் அருகில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் மூவருக்கும் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும்.  தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுத்து திராவிட இயக்கத்தின் மூலம் தமிழுணர்ச்சியை ஊட்டி தமிழனுக்கு அடையாளம் கொடுத்த மூவருக்கும் சென்னையில் சிலை வேண்டும். சீமானோ அவரது சித்தப்பனோ வந்து எதிர்க்கட்டும்!

Exit mobile version