Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெண்ணை துன்புறுத்திய பாஜக பிரமுகர் கைது!

பாஜகவின்  பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறவர் பாரத்தசாரதி. இவர் 2018-ஆம் ஆண்டு  சித்ரா என்ற பெண்ணிடம் தவறாக நடக்க அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஜாமினில் வந்த அவர் தனக்கு எதிராக புகார் கொடுத்த சித்ராவை மீண்டும் சீண்டுகிறார்.

இது தொடர்பாக சித்ரா காவல்துறையில் கொடுத்த புகாரில்,

“நாங்கள்‌ வீட்டு வாசலில்‌ இருந்தால்‌ தகாத வார்த்தைகளால்‌ திட்டி, உங்கள்‌ மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல்‌ விடமாட்டேன்‌ என்று மிரட்டுகிறார். நானும்‌ என்‌ மகள்களும் எங்கள் வீட்டு‌ வாசலில்‌ கோலம்‌ போடும் போதெல்லாம்‌ அவர் வீட்டு ஜன்னலில் இருந்து போட்டோ எடுத்து தொந்தரவு செய்கிறார்.  என்‌ கணவர்‌ தட்டிகேட்கும் போதெல்லாம் அவரையும் கொலை செய்து விடுவதாக பார்த்தசாரதி மிரட்டுகிறார். எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து  போலீசார்  விசாரித்த போது  சம்பவம் உண்மை என்று தெரியவர பார்த்தசாரதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்தபோது அவர் தலைமறைவாக இருந்தார். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகரை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் குற்றவழக்குகள் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்கள் சிக்கி வருவது தமிழ்நாட்டு அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

Exit mobile version