Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெகாசஸ் தனி விசாரணை ஆணையத்தை அமைத்தார் மம்தா பானர்ஜி!

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி  அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை இந்திய பிரதமர் மோடி இது பற்றி  எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இந்த வேவு பார்க்கும் விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தொலைபேசி, அவருக்கு தேர்தல் பணி செய்த பிரசாந்த் கிஷோர், மற்றும் மம்தாவின்  நெருங்கிய உறவினர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மம்தா அரசு  இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தை பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக  விசாரிக்க அமைத்துள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பீம் ராவ் லோகூர் மற்றும் கொல்கொத்தா உயர்நீதிமன்ற  முன்னாள் நீதிபதி  ஜோதிர்மோய் பட்டாச்சார்யா  ஆகியோரைக் கொண்ட விசாரணை ஆணையத்தை மம்தா அமைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருப்பது மத்தியில் ஆளும் அரசு.ம்,மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளை ஒட்டுக் கேட்டதாக குற்றச் சாட்டு இந்திய அரசியலில் கொந்தளிப்பை உருவாக்கியிருகிக்கும் நிலையில்  ஒரு மாநில அரசு மத்திய அரசுக்கு எதிராக விசாரணை ஆணையத்தை அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் மாநில அரசின் இந்த விசாரணை ஆணையத்தின் வரம்பு அதன் முக்கியப் பணிகள் என வரையறுக்கப்பட்டிருப்பவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டதுதான். யாருடைய தொலைபேசிகள், கணிப்பொறிகள் கண்காணிக்கப்பட்டன என்பதும் யார் இந்த வேலையில் ஈடுபட்டது என்பதை கண்டுபிடிப்பதுமே முக்கியப் பணிகளாக இருக்கும்.

Exit mobile version