Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புழல் சிறையிலிருந்து 14 இலங்கை மீனவர்கள் விடுதலை

இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர்.
இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர்.

கடந்த 18–ந் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.இதே புழல் சிறையில் அகதித்தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் பலர் பல ஆண்டுகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் 14 பேரும் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

காலை 10.45 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் தனி வேன் மூலம் சென்னை எழும்பூர் புத்த மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று மாலை 14 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே, சமீபத்தில் 11 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை 12 பேர் விடுதலை ஆனார்கள். இப்போது 14 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version