வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு புறத்தில் இன்ரர்போல் நிறுவனத்தால் தேடப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசோடு இணைந்து இயங்கும் அதே வேளை புலி உறுப்பினர்களைக் கைதுசெய்ய அதே நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது இலங்கை அரசு.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
குறித்த ஆறு முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற காரணத்தினால் குறித்த நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.