மன்னராட்சியை அழிப்பதற்கான போராட்டத்தில் பிரசண்டா சார்ந்த கட்சி மக்கள் யுத்தம் நடத்தி வெற்றிகண்டது. வெற்றியின் பின்னர் புதிய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தவேண்டும் என்று கட்சியின் பெரும்பகுதி பிரசண்டா தலைமையை நிராகரித்து ஆட்சியில் பங்குபற்றாமல் வெளியேறி புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ளது. அதே வேளை பிரசண்டா பாராளுமன்ற வழிமுறையையும் தேர்தலையும் ஏற்றுக்கொண்டு ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட நேபாள மாவோயிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றது. உழைக்கும் மக்களின் தலைமையில் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடும் சிங்களத் தொழிலாளர்களுடனும் இணைந்து பிரிந்து செல்லும் உரிமைக்கன போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.