உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பாதிரியார் இமானுவேல் புலிகளின் போர்க்குற்றமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் இதழுக்கு வழங்கியுள்ள இந்த நேர்காணலில் அரசாங்கம் தமிழர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒருபக்க சார்பான எதிர்வினைகளையே ஆற்றிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முழுமையான உண்மையை அறிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருபக்கத்தை மட்டும் குற்றம் சுமத்துவது சரியானதல்ல என்றும் அவர் மேலு தெரிவித்துள்ளார். பின்காலனியச் சூழல் முழுவதுமே இனச் சுத்திகரிப்பிற்கும் இனப்படுகொலைக்குமான காலகட்டம் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கெதிரான போராட்டங்களைச் செழுமைப்படுத்தும் நோக்கிலேயே சுயவிமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கான வெளிப்படையான சுய விமர்சன அறிக்கை வெளியிடப்படுமானல் அது போராட்டத்தை முன்நோக்கி நகர்த்தும் என்பதில் ஐயமில்லை.