Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் ஊடுருவி பிரபாகரனைக் கொன்றது – நோர்வே : இன்னமும் மாவீரர் இல்லை

அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக நோர்வே அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க துருப்புக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடங்களுக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்புலி தலைவர் சூசை, புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரை கொன்றதாகவும் நோர்வேயின் அறிக்கை கூறுகிறது.
எனினும் இறுதிக்கட்ட போரின் போது இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்று நோர்வேயின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர், வன்னியை இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று நோர்வே எண்ணியது. ஆயினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகள் குறித்த எதிர்ப்பார்ப்பையும் நோர்வே நிராகரிக்கவில்லை.
பிரபாகரன், உயிருடன் இருந்தால், தமிழீழ விடுதலைப்புலிகள், வன்னிக்காட்டுக்குள் சென்று கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம் என்றும் நோர்வே எதிர்ப்பார்த்தது.
இதுவரை காலமும் மரணித்துப் போன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நினைவு கூருவதாகக் கூறி புலம் பெயர் நாடுகளில் கொண்டாடப்படவிருக்கும் மாவீரர் தின விழா குறித்த் இரு பிரிவுகளிடையே சர்ச்சைகள் தொடர்கின்றன. அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்னமும் மாவீரர்களில் ஒருவராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version