இந்தியா சீனா போன்ற நாடுகளின் பின்பலத்துடனும், மேற்கின் 
“இன்று வெளிநாடுகளிலிருக்கும் ஒரு சிறிய பிரிவினர் இலங்கை ஒரு மோசமான நாடு என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலருக்கு தமிழ் மொழியோ, வடக்கிலிருக்கும் தமிழ் ஊர்களின் பெயர்களோகூடத் தெரியாது” என்றார் அவர்.
இலங்கையில் இருக்கும் சிலரே இவர்களுக்குத் தவறான தகவல்களைச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும், இவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் எதுவும் தமக்குக் கிடையாது என்றும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி அலைவரிசைகள் வாயிலாக நடத்தப்பட்ட இந்த நேரடி பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வில், நாடு முழுவதும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தமது பிரச்சினைகள், பிரதேசத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.