Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் 3 எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொண்ட பாஜக!

புதுச்சேரி முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்து தன்னை வலுவாக்கிக் கொண்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக முதல்வர் பதவியை கேட்டு என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது. அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் துணை முதல்வர் பதவியை பாஜக கேட்டது. அதற்கும் ரங்கசாமி ஒத்துக் கொள்ளாத நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரிய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு மூன்று நியமன எம்.எல்.ஏக்கள் உண்டு, அதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு என்ற மூவரை பாஜக நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் பாஜக தன் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இனி பாஜகவின் விருப்பங்களுகு ரங்கசாமி பணிந்து போகா விட்டால் பாஜக சுயேட்சைகளை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள்.

Exit mobile version