புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. பின்னர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை மிரட்டி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் கட்சிக்கு வந்த ஜான் குமார் என்பவருக்கு பாஜக அமைச்சர் பதவி மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் பாஜக கட்சி அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் ஜான் குமார் இவர் ஒரு லாட்டரி சீட்டி வியாபாரி ஆவார். இவரை மிரட்டி தங்கள் பக்கம் இழுத்த பாஜக அவருக்கு தங்கள் கட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் கூறியது.இதை ஏற்றுக் கொண்டு பாஜகவுக்கு வந்த ஜாண் குமார் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான்குமார். இதேபோன்று அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவரது மகனும் ரிச்சார்ட் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் அவருக்கு பதவி கொடுக்காததைக் கண்டித்து ஜான் குமார் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனையொட்டி பலத்த கைகலப்பும் ஏற்பட்டது. இப்போது பாஜக மேலிட நிர்வாகிகளைச் சந்திக்க ஜாண் பாபுவும் அவரது மகனும் டெல்லி சென்றுள்ளார்கள்.
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பே பலத்த சர்ச்சைகளோடும் பதவி மோதல்களோடும் சூழல் மோசமாகி வருகிறது.