எமதுஅமைப்பு புலம்பெயர் சூழலில் இயங்குகின்ற பொழுதிலும், இலங்கை வாழ் சமூகங்கள் நோக்கியே தனது அரசியல்,அமைப்பு, நடைமுறைப் பரப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வகை அரசியல் முனைப்புகள் புலத்தில் இருந்துமுன்னெடுக்கப்படுவதுதான் ஆரோக்கியமானது என்பதை நாங்கள் புரிந்து கொண்டவர்களாகவே இருக்கின்றோம். 6 வருடகால அமைப்பு ரீதியான எங்கள் அரசியல் பயணத்தின் ஊடாகவும்; சமீபகால அரசியல்,சமூக மற்றும்பொருளாதார மாற்றங்கள் என்பனவும் எமது அரசியல் நகர்வை மேற்கொள்வதற்கான அதிக தேவையை வேண்டிநிற்பதாக உணருகிறோம்.
இவ்வகை கருத்தோட்டத்தின் விளைவாக, இலங்கை தீவில் வாழும் சமூகங்கள் தொடர்பாகவும் குறிப்பாகஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகள் என்னும் தளத்தில் எமது சமூகப்பார்வையையும் அதற்கான அரசியல்தீர்வையும் இவ்வரசியல் அறிக்கையின் மூலம் கொண்டு வருகின்றோம். இது ஒரு முன்மொழிவு மட்டுமே. இதன்உள்ளடக்கம் விவாதிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும், வளர்த்தெடுக்கபடுவதும் அவசியமாகும். விடுபட்டவிடயங்கள் இடித்துரைக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கருத்துகள் சமூகமயமாகும் பொழுது மட்டுமே அவைநடைமுறை வடிவம் பெறுகின்றன. இவ்வறிக்கையில் மையமாக கருத்துக்கொள்ளப்படும் மக்கள் பிரிவின்பங்களிப்புடனேயே இவ்வறிக்கை செழுமை பெறும் என்பதை திடமாக நம்புபவர்கள் நாங்கள் . புதிய திசைகள்தவிர்ந்த சில அரசியல் ஆர்வலர்களின் கருத்துக்களையும் இவ்வறிக்கை உள்வாங்கியுள்ளதையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறோம்.
வளர்த்தெடுக்கபடும் அரசியல் அறிக்கையின் தொடர்ச்சியாக ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உங்கள் முன்வைத்து அமைப்பு, நடைமுறை வேலைகளை முன்தள்ளுவது என்பது எமது பிரதான நோக்கமாகும். உங்களின்மேலான பங்களிப்புடன் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
புதிய திசைகளின் வேலைத்திட்டம்: