
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 9 பேர் உயிரிழந்தனர். மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 60 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலகின் வல்லரசு எனக் கூறிக்கொண்டு ஏனைய நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுளைக்கும் வறுமை நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மட்டும்தான் இவ்வாறான கொலைகள் இந்த நூற்றாண்டிலும் நடைபெறும். பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு முழுமையாக அடகுவைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரமும் அரசியலும் ஏழைகளின் அழிவில் வாழ்கை நடத்துகின்றன.