நிலப்பிரபுதுவ அமைப்பு என்பது, அதற்கு முன்னான சமூக அமைப்பின் பண்பாட்டு எச்ச சொச்சங்களையும் கொண்டே கட்டமைக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ மன்னர்களின் மையப் பேரரசை நோக்கி இயைவாக்கமடையவல்ல வகையில் சமூகக் குழுக்கள் பண்பாட்டு நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டன. மையவரசினதும் அரசர்களினதும் மதக் கோட்பாடுகளோடு இனக்குழுக்கள் சார்ந்த வழிபாட்டு முறைகள் இணைக்கப்பட்டன. காலப்போக்கில் இவ்விணைவானது ஒரு குறித்த மதமாமக உருமாற்றம் பெற்றது. இந்த மதமே மக்களை இணைக்கும் சங்கிலியாக மாற்றம் பெற்றது. இதுவே அரசின் தத்துவார்த்த மேற்தளமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக அரசுகளிடையான போர்களும் முரண்களும் மதப் போர்களாகவும் உருவெடுத்தன.
இந்து மதத்தின் சமூகப் பகுதிகளாக உருவாகியிருந்த சாதீய முரண்பாடுகளை தமது தேவைக்காக் கையாண்ட பிரித்தானிய அரசு இம்முரண்பாடுகளைத் தொடச்சியாகக் கூர்மைப்படுத்தி இந்திய சமூகத்தின் விஷவேர்களாக இழையோட விட்டிருப்பது போலவே இலங்கையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும், சைவ வேளாள ஆதிக்கத்தையும் திட்டமிட்டு உருவாக்கி சமூகத்தைக் கூறுபோட பிரித்தானிய ஆதிக்கத்திற்கு உதவியது.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே பிரித்தானிய அரசு தனது பிரித்தாளும் தந்திரத்தை ஆரம்பித்தது.
இந்து மதத்தின் ஆதாரமாகக் கருதப்படும் வேத மந்திரங்கள் எந்தத் தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்படவில்லை. பௌத்தமதத்தினை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கியங்களான மணிமேகலையும், குண்டலகேசியும் ஆங்கிலேயரால் வடமொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.
ஆனால் மகாவம்சம் என்ற மர்மக்கதை போன்ற பாளிமொழியில் அமைந்த மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நூலானது ஆங்கிலேயரின் உத்தரவின்பேரில் அவசர அவசரமாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
1874ம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து அரசின் கவர்னராகப் பணியாற்றிய சேர் வில்லியம் எச்.கிரகரி என்பவர் இங்கிலாந்து நாட்டில் கல்விகற்று வந்த இலங்கைப் பௌத்தர்களுடன் இணைந்து வண. ஹிக்கடுவ ஸ்ரீ சமுனன்கல நாயக்க தேரர் மற்றும் வண. பந்துவந்தாவ ஸ்ரீ தேவராக்கித்த தேரர் ஆகியோரைக் கொண்டு மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளை சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ச்சி செய்து கிராமமட்டங்கள் வரை இருந்த விகாரைகள் முழுவதுமாக விநியோகம் செய்தனர். இதனூடாக மொத்த மக்கள் மத்தியிலும் இந்த மகாவம்சம் பரப்பப்பட்டது.
மூலதன உருவாக்கத்துடன் கூடவே எழுந்த நாடுதழுவிய தேசிய உணர்வினை சீர்குலைத்து தமது பிரித்தாளும் தந்திரத்தினை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரவப்பட்ட மகாவம்சம் உருவாக்கிய முதலாவதும் முக்கியமானதுமாக அறியப்பட்ட மனிதன் தான் அனகாரிக்க தர்மபால என்னும் பௌத்த துறவியாவார்.
இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின் நாயகனாகப் போற்றப்பட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களையும் தபால்தலைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த அனகாரிக்க தர்மபால என்ற மகாவம்சத்தின் நவீனகால வாரிசான இவர்தான் புதிய இலங்கையின் பௌத்த பேரினவாதத்தின் கர்த்தாவானார்.
சிங்கள இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவ மதத்தவரான இவர் ஆரிய பௌத்த பேரினவாதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்.
Madame Blavatsky என்ற மேற்கத்தையை தத்துவாசிரியரின் நேரடியான மேற்பார்வையில் உருவான அனகாரிக்க தர்மபால தமிழர்களைத் திராவிடர்கள் என்றும் சிங்களவர்களை ஆரியர்கள் என்றும் வகுத்து ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தமது ஆசிரியரின் கொள்கைகளைப் பரப்பி மக்களைக் கூறுபடுத்தினார்.
இல் ரஷ்யாவின் உக்ரெயின் பிரதேசத்தில் பிறந்த இவர் அமெரிக்காவின் நியு யோர்க்கிலும் ஜேர்மனியிலும் இறுதியாக இங்கிலாந்திலும் வசித்துவந்தார்.
பல தத்துவவியலாளர்களால் புதிய தத்துவகாலத்தின் ஆரம்பகர்த்தா என வர்ணிக்கப்பட்ட டீடயஎயளமல பல சர்ச்சைக்குரிய தத்துவங்களை முன்வைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் முனைந்தவர். குடியேற்ற நாடுகளில் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்திய இவரின் கருத்துக்கள் எதிர்காலத்தில் இலங்கை என்ற நாட்டை இரத்த ஆறுபாயும் மனிதக் கொலைகளின் மண்ணாக மாற்றியது என்பது பலருக்கும் ஆச்சரியமான விடயமாக அமையலாம்.
Colonel Olcott ஆண்டு என்பவரை நியுயோர்க்கில் சந்தித்த Madame Blavatsky அவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தார். பின்னதாக வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் 1875ம் ஆண்டு Theosophical Society என்ற அமைப்பை Colonel Steal Olcott உடன் இணைந்து ஆரம்பித்தார். எந்த மதத்தினையும் சாராத இந்த அமைப்பானது எல்லா மதங்களினதும் அடிப்படைக் கருத்துக்கள் சரியானது என்றும் அதன் மனித சிந்தனை ஊடான வெளிப்பாடுகள் தவறானவை என்றும் கருத்துக்களைக் கொண்டிருந்த இவர், ஆரியர்களே மனித இனங்களில் மேலானவர்கள் என்றும் நாகரீகமடைந்த உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்துக்களை முன்வைத்ததினூடாக மனித இனத்தைக் கூறுபோட்டார்.
Helena Blavasky யின் எல்லா எழுத்துகளுமே இனவாத, நிறவாதக் கருத்துக்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன.
The Secret of Doctrine என்ற நூலில் ஆரியர்களைப் பிறப்பால் மனித இனத்தின் உச்சநிலையிலுள்ள நாகரீகமடைந்தவர்களாகவும், அப்ரொஜின் இன மக்கள் போன்ற ஆதிக்குடிகளை அரை மிருகங்களாகவும் வர்ணிக்கிறார்.
இவ்வாறு இனவாதத்தையும் நிறவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனித இனத்தைக் கூறுபோட முனைந்த இவர், இந்த நோக்கத்திற்காக இலங்கையில் தேர்ந்தெடுத்த மனிதர் தான் அநகாரிக்க தர்மபால என்பவராவார்.
1864ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த ஒரு செல்வந்தரின் மகனாகப் பிறந்த அநகாரிக்க
மகாவம்சம் ஆங்கிலேயர்களால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், இலங்கையில் எழுந்த சிங்கள-பௌத்த எழுச்சியினால் உந்தப்பட்டார்.
இதே காலப்பகுதியில், 1882ம் ஆண்டில் Madame Blavatsky யின் Theosophical Society இன் தலைமையகம் தென் இந்தியாவிலுள்ள அடையாறு என்ற இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் பௌத்த மதத்துடன் தமது ஆரிய இனவேறுபாட்டுத் தத்துவத்தை அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். Madame Blavatsky Ak; Colonel Olcott உம் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையிiனையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்.
Colonel Olcott மட்டும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னர்களின் ஆதரவுடன் 300 பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தான்
1886ம் ஆண்டு Colonel Olcott பௌத்த பாடசாலைகளை நிறுவும் நோக்குடன் இலங்கைக்கு வந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றிய அநகாரிக்க தர்மபால பின்னதாக பௌத்த துறவியாக மாறினார்.
மகாவம்ச மொழிபெயர்ப்பிற்கும், Theosophical Society இன் உருவாக்கத்திற்கும் பின்னதாக எழுந்த பௌத்த-சிங்கள மேலாதிக்க உணர்வின் ஆரம்பகர்த்தாவாகத் திகழ்ந்த இவரின் கருத்துக்கள் கிராமப்புறங்கள் வரை சென்று மிகவும் அடிமட்ட மக்களின் சிந்தனை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தின.
தேசியவாதம், மகாவம்சம், Madame Blavatsky யின் சிந்தனைகள் ஆகியவற்றின் நச்சுக் கலவையான இவரின் கருத்துக்களும் பிரச்சாரங்களும் தான் பௌத்த-சிங்கள அடிப்படைவாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அமைதியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்த விகாரைகள் இனவாதத்தையும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தையும் கக்கும் நெருப்பாக மாறின. இது ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்திற்கு மிகப் பாரிய வெற்றியைக் கொடுத்தது.
இந்தியாவில் உருவான தேசிய எழுச்சியினது தாக்கத்தாலும், இயல்பாக பொருளாதார மாற்றத்தாலும் உருவான ஏகாதிபத்திய மூலதனத்திற்கு எதிரான இலங்கை மக்களது உணர்வலைகள் கூறுபோடப்பட்டு, தேசிய சக்திகளும், தேசிய உணர்வும் சீர்குலைக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அத்திவாரமிடப்பட்டது.
Madame Blavatsky யின் சிந்தனைகள் எவ்வாறு ஜேர்மனியில் ஹிட்லர் பரப்பிய நாஸிசத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படைக்காரணிகளில் ஒன்றாக அமைந்ததோ, அதுவே காலனி ஆதிக்கத்தால் எற்கெனவே சீரழிந்துபோன இலங்கையிலும் அநகாரிக்கவில் ஆரம்பித்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கும் இனப்பிரச்சினையின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.
அநகாரிக்கவும், இவரைப் போலவே பிரித்தாளும் நோக்கத்திற்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஆரிய தத்துவத்தை தமது எழுத்துக்களினதும் பிரச்சாரங்களினதும் அடிப்படையாகக் கொண்டிருந்தார்.
பிற்காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும், கிறீஸ்தவ மதத்திற்கும் எதிராக அநகாரிக்க கடும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் உருவாகிவந்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வையும், நாட்டின் சொந்த மூலதனத்தை அபிவிருத்தி அடையச்செய்யும் தேசியவாதத்தைக் கூறுபோட்டு, நாட்டைச் சீரழிப்பதில் அநகாரிக்கவின் பங்கானது, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரத்திற்கு பெரும் சேவையாற்றியதுடன், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும், தமிழ் தேசிய வாதத்தையும் உருவாக்கி பெரும் தேசிய இன மோதல்களை ஏற்படுத்திற்று.
ஆங்கிலேயர் உருவாக்கிய ஆரியர் கோட்பாட்டின் சர்வதேசப் பிரதிநிதி Blavatsky என்றால், அதன் இலங்கைப் பிரதிநிதி அநகாரிக்க தர்மபாலவாகத் திகழ்ந்தார்.
‘இந்த அழகான, பிரகாசமான தீவு ஆரியச் சிங்களவர்களால் சொர்க்க பூமியாக மாற்றப்பட்டிருந்தது. அதன் மக்களுக்கு மதசார்பற்ற நிலை பற்றித் தெரியாது. இந்துக்களும், கிறீஸ்தவர்களும் மிருகக் கொலைக்கும் களவுக்கும் பொய்க்கும் விபச்சாரத்திற்கும் பொறுப்பானவர்களாவர்’ என்று குறிப்பிடும் அநகாரிக்கவின் உரைகளில் ஒன்று மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகும்.
இவரின் உரைகள் இலங்கையின், கல்வி கலாச்சார அமைச்சினால் தொகுத்தும் நூலுருவில் வெளியிடப்பெற்றுள்ளது.
காலனியாதிக்க சக்திகளால் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட்ட இந்த அநகாரிக்க தர்மபால, தமிழர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள மக்களின் எதிரியாகக் காட்டுவதற்கு தம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதனூடாக, பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மகத்தான சேவை செய்து வந்தார். துட்டகமுனு, எல்லாளன் போரைத் தமிழர்களுக்கு எதிரான போராகச் சித்திரித்து தமிழர்களை இலங்கையின் எதிரிகளாகக் காட்ட முற்பட்டார்.
மேலும், நிறவாதத்தைத் தூண்டும் நோக்குடன் சிங்களவர்களைத் தூய்மையான ஆரியர்களாகக் குறிப்பிட்ட இவர், தாம் வட இந்தியர்கள், ஐரோப்பியர்கள், ஈரானியர்களை ஒத்த ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழர்கள் இரண்டாம்தர நாகரீகமடையாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது.
காலனி ஆதிக்க சக்திகளால் தமது சொந்த நலன்களுக்காக ஊக்குவித்து வளர்க்கப்பட்ட அநகாரிக்க தர்மபால, இன்றும் அரச பாடப் புத்தகங்களிலும், கலாச்சார, பண்பாட்டு வைபவங்களிலும், விகாரைகளிலும் வரலாற்றுக் கதாநாயகனாக வர்ணிக்கப்படுகிறார். அநகாரிக்கவினூடாக பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஆரம்பிக்கும் இனவாதம், அமைப்பு மயப்படுத்தப்பட்ட அடிப்படைவாத விகாரைகளினூடாக விரிவுபடுத்தப்பட்டு, அரசியற் கட்சிகளால் உந்தப்பட்டு, சர்வதேசிய சக்திகளால் ஆதரிக்கப்பட்டு சிங்கள தேசிய இனத்தையே மாய இருளுக்குள் வைத்திருக்கிறது.
தெற்காசியாவினதும், இலங்கையினதும் வளர்ச்சியையும் சுதந்திரத்தையும் சீரழிக்கும் அபாயமுள்ள இந்தக் கருத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியானது, சர்வதேசிய மயமாக்கலுக்குப் பின்னதான உலக ஒழுங்கமைப்பில் மிகுந்த முக்கியத்துவமடைந்துள்ளது.