Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களின் எதிர்காலத்தைக் அழிக்கும் நிறவாத அரச பயங்கரவாதம்!

racismபிரான்சில் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ இனால் நடத்தப்பட்டது என்றும் பிரஞ்சுப் போலிசாரால் கொலைசெய்யப்பட்ட இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கலாநிதி போல் கிரெக் ரோபர்ட்ஸ் மீண்டும் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். 12 பேரைக் கொலைசெய்த தாக்குதலை நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே நடத்தியுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட சகோதரர்கள் எந்தப் பயிற்சியும் அற்றவர்கள் என்று அவர் கூறுகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தும் போது தற்கொலைத் தாக்குதல்களே நடத்துவார்கள் ஆனால் பாரிசில் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்செல்வதில் குறியாக இருந்திருக்கிறார்கள் என்று ரொபேர்ட்ஸ் குறித்துக்காட்டுகிறார்.

பிரஞ்சு உளவுத்துறையில் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இல்லாத ஆளுமை அமெரிக்க உளவுத்துறைக்கு இருப்பதாகக் கூறும் கலாநிதி ரொபேர்ட்ஸ் பிரஞ்சு உளவுத்துறையுடன் இணைந்தே சீ.ஐ.ஏ கொலையை நடத்தியிருப்பதாகக் கூறுகிறார்.

பாரிஸ் படுகொலைகளின் உண்மையான தகவல்களை அறியாமல் வெறும் பிரச்சார நோக்கங்களைக் கொண்டே ஊடகங்கள் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற தலையங்கத்தில் பயங்கரவாத யுத்தம் ஒன்றை மறுபடி அமெரிக்கக் கொலையாளிகள் ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க அரச சேவையில் நீண்டகால அனுபவம் மிக்க ரொபேர்ட்ஸ் இன் கருத்துக்கள் பொய்யானவையா என்பதை விட அவை உண்மையாகவும் இருக்கலாம் என்பதை அமெரிக்கப் பயங்கரவாதிகள் கடந்த காலத்தில் நிறுவியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கொலைசெய்யப்பட்ட சகோதரர்கள் அல்ஜீரியப் பெற்றோருக்குப் பிரான்சில் பிறந்தவர்கள். அவர்கள் தான் சார்ளி ஹெப்டோ கொலையாளிகள் என்ற தகவல்களைப் பிரஞ்சு உளவுத்துறையே வெளியிட்டது. வேறு எந்த ஆதாரமும் இவர்கள் இருவரும் கொலையாளிகள் என்பதற்கு வழங்கப்படவில்லை.

பல்வேறு சமூகவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரஞ்சு உளவுத்துறையை நம்புவதைப் விட சமூகப் பற்றுள்ள ரொபேர்ட்சை நம்பிவிடலாம்.

ரொபேர்ட்சை, பேச்சுச் சுதந்திரத்தை வேண்டி கடந்த ஞாயிறன்று (11.01.2012) பாரிசில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே வாரத்தில் ஒரு இஸ்லாமியப் போலிஸ் ஊழியரும், நான்கு யூதர்களும் உயிர்வாழும் உரிமையைப் பறிகொடுத்துக் கொல்லப்பட்டனர். நிறவாத நாசிக் கும்பல்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

சார்லி எப்டோ தாக்குதல் நடபெற்றதும் ஊடகங்களும் அரச இயந்திரமும் இணைந்தே நிறவாதத்தை உமிழத் தொடங்கின.

ஐரோப்பிய நாடுகளில் தேசிய வெறி சமூகத்தின் ஆழத்தில் படிந்திருந்த நாடுகளில் பிரான்சை கோடுபோட்டுக் காட்டலாம். தேசிய வெறி என்பதன் இருப்பையே நிரகாரிக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அதன் வளர்ச்சியை ஊக்குவித்தது. தம்மை

இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் பிரான்சின் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கூட தேசிய வெறியின் வளர்ச்சியக் கண்டுகொள்ளவில்லை. நிறவாதத் தேசிய வெறியர்களின் வளர்ச்சி பிரஞ்சு மக்கள் மத்தில் அருவருப்பான மிருக உணர்வை வளர்த்தது.

பிரான்சில் பிறந்து பல்கலைக்கழக அனுமதிபெற்று பட்டப்படிப்பை முடிக்கும் வெளி நாட்டவர்களின் குழந்தைகளில் பெரும்பாலானவரகளுக்கு வெளி நாட்டவர்கள் என்பதால் வேலை கிடைப்பதில்லை. இதனுள் புலம்பெயர்ந்த தமிழர்களும் அடக்கம். தெருக்களிலும், பொது இடங்களிலும் இரண்டாம் தர மனிதர்களைப் போன்றே அவர்கள் நடத்தப்படுகின்றனர்.

தாக்குதலின் பின்னர், இது மற்றொரு புதிய நிலையை நோக்கி வளர்ந்துள்ளது. வெளி நாட்டவர்கள் நடமாடுவதற்கே அஞ்சும் சூழல் தோன்றியுள்ளது. குறிப்பாக மக்ரேபியன்கள் என அழைக்கப்படும் வட ஆபிரிக்கர்களை நோக்கியே காணப்பட்ட நிறவாதத் தாக்குதல்கள் இன்று அனைத்து வெளி நாட்டவர்களையும் குறிவைக்கும் நிலையை அடைந்துள்ளது.

பொதுவாகவே அதிகாரவர்க்கத்துடன் இசைந்து போகும் இயல்பைக்கொண்ட, அநீதிகளைகளைத் தட்டிக்கேட்கத் துணியாத புலம்பெயர் தமிழர்கள் ஏனைய வெளி நாட்டவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. அதே வேளை வெள்ளை நிறவாதிகளின் மத்தியில் பாதுகாப்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஒடுக்கு முறையோடு இசைந்து போகும் அவர்களது இயல்பு இன்று இரண்டும் கெட்டான் நிலையில் அவர்களை இருத்தியுள்ளது.

பிரான்சில் கூர்மையடையும் வர்க்க முரண்பாட்டை மூடி மறைப்பதற்கு நிறவாதம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்கு எதிரான உணர்வு வெளி நாட்டவர்களுக்கு எதிராகத் திசை திருப்பப்படுகிறது. இதனால் தான் பிரான்சின் நிறவாத நாசிக் கட்சியான தேசிய முன்னணி பிரஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அவசியமாகின்றது.

-நிவேதா

Exit mobile version