பாரிசில் நடைபெற்ற விமர்சன நிகழ்வும் நிழல்படங்களும்
இனியொரு...
பரிஸ் இல் 29.04.2012அன்று ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” நூல் வெளியீடு ந்டைபெற்றது. சத்தியசீலனோடு உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுபதிற்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் கலந்துகொண்டனர். ஈழப்போராட்டம் குறித்த சுய விமர்சனம் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால நேரடி சாட்சியான கணேசன் – ஐயர்- இன் நேரடிச் சாட்சியிலிருந்து எழுந்திருப்பது ஆரோக்கியமான அரசியல் சூழலை உருவாக்கியிருப்பதாக கலந்து கொண்ட பலரினதும் கருத்தாக அமைந்தது. சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடல் நிகழ்வின் முழுமையான வடிவம் எதிர்வரும் நாட்களில் முழுமையாக வெளியிடப்படும்.