Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரமேஷ்வர்சிங் முகியா கொலை இன்றும் பதற்றம் நீடிக்கிறது

பீகாரில் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இந்து தத்துவா பயங்கரவாத அமைப்பாக ரன்வீர் சேனா என்ற அமைப்பை பிரமேஷ்வர்சிங் முகியா தொடங்கினார்.
இவர் மீது 22 வழக்குகள் உள்ளது. 1996-ம் ஆண்டு பாத்தே என்ற இடத்தில் 61 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடையவர்.
இவரைப் போலிஸ் கைது செய்தும் வழக்குகளில் இருந்து பிரமேஷ்வர்சிங் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். இதனால் ஜெயிலில் இருந்து விடுதலையானார். நேற்று காலை பிரமேஷ்வர் சிங் போத்பூர் மாவட்டத்தில் நவாடா அருகே உள்ள தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்கு சென்ற போது சிலர் அவரை சுட்டுக் கொன்றது. இதனால் பீகாரில் பதட்டம் நிலவியது.
பிரமேஷ்வர் சிங் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 5 தனியார் பஸ்கள் மற்றும் அரசு வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது. விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பினர். மாநில டி.ஜி.பி. அபயானந்தையும் முற்றுகையிட்டனர். உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர்.
அவமானக்ரமான வகையில் போலீஸ் எந்தப் பரிசோதனையும் இன்றி அவரது உடலை அவரது வீட்டுக்கே எடுத்துச் செல்ல அனுமதித்தது.
பக்கத்து மாவட்டங்களுக்கும் கலவரம் பரவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பீகார் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் பி.கே.சிங் மாநில அதிகாரிகளுடக் தொடர்பு கொண்டு விசாரித்தார். இன்று அவர் பீகாருக்கு நேரில் சென்று நிலைமையை கண்டறிந்தார். பாதுகாப்பை மேம்படுத்த பீகார் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version