Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் பற்றி சத்தியராஜ் : பிழைப்புக்காக பயன்படும் அவலம்

Sathyarajசினிமா தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சத்தியராஜ் பிரபாகரனை ஏன்காட்டவில்லை என்றார்.
“உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்… நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே!” என்றார்

இதனைக் கேட்டுப்பூரித்துப் போன புலம் பெயர் தமிழ் வியாபார இணையங்கள் செய்தியை முக்கியத்துப்படுத்திப் பிரசுரித்தன. சத்தியராஜ் என்ற சினிமாவில் கூத்தாடும் நபருர் தனது பிழைப்பை ஓட்டுவதற்கு ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். அதிலும் அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்கள் கிரிமினல்கள் போல சிறைவைக்கப்பட்டிருக்கும் மண்ணின் இதயத்தில் நின்று இந்தக் கூத்தாடிகள் ஈழத்தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை ஓட்டுகிறார்கள். அருவருக்கத்தக்க அரசியல்வாதிகள், வியாபாரிகள், சினிமாக் கூத்தாடிகள், எழுத்து உலகத்தவர் போன்றோர் இதுவரைக்கும் ஒரு சென்ரி மீட்டர் கூட போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப் பயன்படவில்லை.

Exit mobile version