Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனைத் தேடிக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவ விரும்பிய அமரிக்கா : விக்கிலீக்ஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கோடு அமரிக்காவில் முகாமிட்டுள்ளது. அமரிக்கா எங்கும் அமரிக்க அரசிற்கு எதிரன போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நேற்று பலர் அமரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஏகாதிபத்திய சார்புப் போராட்டமாகவே அது முன்னெடுக்கபட்டு வருகின்றது.
ஒசாமா பின்லடன் கொலை செய்யப்பட்ட வேளையில் இலங்கையிலிருந்த அமரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபெர்ட் ஓ பிளேக் பிரபாகரனும் ஒசாமாவும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருத்து வெளியிட்டார்.
கொழும்பு ரெலிகிராப் இணையம் விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. இலங்கை அமரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனை தேடிக் கைது செய்வதற்கு அமரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுடனும் மனித குலத்தின் எதிரிகளுடனும் கைகோர்த்த மக்கள் விரோத அரசியல் இன்னும் தொடர்கிறது. அவ்வரசியலின் ஊதுகுழல்கள் மக்களை இன்னும் மாயைக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

Exit mobile version