Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனின் மரணம்குறித்து விமனப்படை அதிகாரி : போர்க்குற்ற ஆதாரம்?

இலங்கை அரசு பிரபாகரனின் உடல் நந்திக் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக உலகம் முழுவதுமுள்ள ஊடகங்களில் பிரச்சாரம் செய்தது.அதே வேளை பிரபாகரன் இன்னும் உயிரோடு வாழ்வதாகக் கூறிய இன்னொரு பகுதியினர் அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறையின் அனுசரணையோடு செயலாற்றியவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் திட்டமிட்ட பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சியைத் தடைசெய்தனர். அதே வேளை அன்னிய நாடுகளிலிருந்து இறுதிக் காலங்களில் பிரபாகரனை இயக்கியவரும் இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படுபவருமான கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்தவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டார்.

பிரபாகரன் சரணடைந்த பின்னர் அரசபடைகளால் கொல்லப்பட்டார் என மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
பதினந்தாயிரம் கைதிகளையும், எண்ணிக்கை தெரியாத மக்களையும் சிறைகளிலும் முகாம்களிலும் அடைத்துவைத்து உலகின் மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனப்படுகொலை அரசான இலங்கை அரசு நந்திக்க்கடலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்தமை உலகின் அனைத்து ஊடகங்களையும் மக்களையும் ஏமாற்றும் செயல் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தனது நேர்காணல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

சரணடைந்த பின்னரே கோரமாகக் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் பிரபாகரன் கொலை குறித்த போர்க் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய ஊடகமான வை நெட் நியூசிற்கு டொனால்ட் பெரேரா வழங்கிய செவ்வி ஒரு ஆதாரமாகும்.

முன்னை நாள் விமானப்படை அதிகாரியான இவர் இப்போது இஸ்ரேலில் வசிக்கும் தூதர். இவரது மனைவி இராணுவ பல்வைத்தியர். இஸ்ரேலில் மனைவி மற்றும் மகளோடு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக உற்சாகமாகக் கூறுகிறார்.

இவர் பிரபாகரனின் இரத்தம் தோய்ந்து உறந்த படுக்கை ஒன்றில் பிரபாகரனின் உடல் காட்ட்டின் ஊடாகத் தூக்கிவரப்படுவதைக் கண்ணுற்றதாகக் கூறுகிறார். அதன் பின்னர் பிரபாகரனின் கைத் துப்பாக்கியை காட்டுமாறு கேட்கிறார். அதன் இலக்க்கம் 001 என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறார். அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்திகொண்டேன் என்கிறார். அதன் பின்னர் வீடு சென்ற அவர் தனது மனையிவிடம் தான் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறுகிறார்.

இவரின் இந்தக் கூற்று, பிரபாகரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதற்கான போர்க்குற்ற ஆதாரமாகக் கருதப்படலாம்.

Exit mobile version