இந்து அடிப்படைவாதக் கட்சியான பா.ஜ.க,வின் பொதுசெயலராக இருந்து வந்த சஞ்சய் ஜோஷி பொறுப்பில் இருந்து விலகினார். குஜராத் முதல்வர் மோடி மிரட்டியதால் கட்சியில் இருந்து விலகியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை இனப்படுகொலை செய்த விவகாரம் குறித்து மோடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.இன்று ப.ஜ.க இனுள் மோதல் தீவிரமடைகிறது.
கடந்த வாரம் பா.ஜ., செயற்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் பரவியது. ஆனால் இவர் திட்டமிட்டப்படி பங்கேற்றார். பா.ஜ.,தலைவர் நிதின்கட்காரிக்கு நெருக்கமான சஞ்சய்ஜோஷி திடீரென பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இதனையடுத்துதான் மோடி கலந்து கொண்டதாக டில்லி வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில் சஞ்சய் ஜோஷி தனது பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். உத்திரபிரதேச மாநில பா.ஜ.,பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார். இதனை பா.ஜ., மேலிடமும் ஏற்றுக்கொண்டது.