சிங்களர்களுக்கு எதிராகப் பேசிய சீமானைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழ் அடைந்த இருட்டுத் தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர்.இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்’’ என கூறியுள்ளார்.நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகி, சீமான் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை என்று கூறினார்.இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு இது குறித்த பதிலை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.