Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பால் தாக்கரே – தண்டிக்கப்படாத பயங்கரவாதியின் மரணம்

இந்திய சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனது 86ஆவது வயதில் இன்று மும்பையில் காலமானார்.அரவது மரணத்தை அடுத்து மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் பொலிஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து மதவெறிப் பயங்கரவாதியான பால் தாக்கரே இந்தியா எங்கும் பல கொலைகளுக்குக் காரணமானவர். இந்து மதத்தின் பெயரால் முஸ்லீம்களையும், தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொன்று குவித்த குழுக்களின் தத்துவார்த்தத் தலைவர். தண்டிக்கப்படாமமேயே மரணித்துப் போனார்.

Exit mobile version