அப்போது மகந்த் சந்த் நாத்தும், ராம்தேவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக மெதுவாக பேசிக் கொண்டனர். இது மைக்ரோ போன் மூலம் செய்தியாளர்களுக்கு கேட்டது. உடனே உஷாரான பாபா ராம்தேவ், வேட்பாளரை பார்த்து, ‘‘அட பைத்தியமே பணம் பற்றி பேசாதே, நாம் பேசுவது போனில் கேட்கப் போகிறது’’ என்று கூறி தடுத்து விடுகிறார்.
இந்த உரையாடல் வீடியோவிலும் பதிவாகியது. அதன்பிறகு பணம் கொடுப்பது பற்றி பேசிய இந்த வீடியோ காட்சிகள் ராஜஸ்தானில் உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று சில தொலைக்காட்சிகளில் நாடு முழுவதும் ஒளிபரப்பானது.
ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட இந்திய ஒட்டு முதலாளித்துவமும் ஒட்டு ஜனநாயகமும் காங்கிரசையும், அது தொய்ந்து விழும்போது அதன் அடுத்த கட்டப் பாசிசமான மோடியையும் அழைத்துவருகிறது. புனிதம் குறித்துப் பேசும் பாரதீய ஜனதாக் கட்சியின் சாமியார்களே கடவுளின் பெயரால் மக்களுக்கு லஞ்சம் வழங்குவதைப் பற்றிப் பேசுகிறார்கள். இன்று பல்தேசியக் கொள்ளையர்களுக்கு பாரதீய ஜனதாவும் இந்துத்துவ பாசிசமும் தேவைப்படுகிறது.இவர்கள் கொள்ளையிட்ட திருட்டுப்பணத்தின் ஒரு பகுதி மக்களுக்கு லஞ்சமாக வழங்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியும், ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புகார் தொடர்பாக தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.