Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாஜக முதல்வர் மீது கொலை வழக்கு பதிந்துள்ள மிசோரம் காவல்துறை!

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை  கொலை வழக்கு பதிந்துள்ளது.

அஸ்ஸாம்மாநிலத்தில் பாஜக நேரடியாக ஆளும் கட்சியாகவும் மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளது. இந்த ஒரு மாநிலங்களுக்கும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை உள்ளது.

கடந்த திங்கள் கிழமை  மிசோரம் எல்லையோர மாவட்டமான  கோலாசிப்பகுதியின் வைரெங்கதே என்ற இடத்தில் அசாம் மாநில போலீசாருக்கும் மிசோரம் மாநில போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது இதில் 6 மிசோரம் மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

சமீபத்தில்தான் வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில் அஸ்ஸாம், மிசோரம் மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.இந்நிலையில்தான் இந்த மோதல் வெடித்து அதில் 6 காவல்துறையினரே கொல்லப்படும் அளவுக்கு சூழல் மோசமானது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இப்படி இரு மாநில காவல்துறையினருக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடந்ததில்லை.  ஏதோ அந்நிய நாட்டு திவீரவாதிகளைச் சுடுவதுப் போல அஸ்ஸாம் மாநில போலீசார் மிசோரம் மாநில போலீசாரை சுட்டிருக்கிறார்கள்.

இப்போது அஸ்ஸாம் மாநில முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மிசோரம் மாநில அரசு வழக்குப் பதிந்துள்ளது.

Exit mobile version