Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி ஆகிறார்!

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படு தோல்வியடைந்ததால். தமிழ்நாட்டில்  இருந்து மாநிலங்களவை உருப்பினர் ஆக முடியாமல் போன சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவாகிறார் பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன்.

தமிழ்நாட்டு பாஜக தலைவராக இருந்த எல்,முருகன அருந்ததியர் என்னும் தலித் சாதியைச் சேர்ந்தவர். இவர் தலைவரான பின்னர் கோவை பகுதி தலித் மக்கள் பாஜக பக்கம் திரும்பியதாக பாஜக நம்புகிறது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுத்களில் வென்றுள்ளது 16 தொகுதிகளில் தோல்வியடைந்தது.

ஆனாலும் அதை மிகப்பெரிய வெற்றியாகக் கருதும் பாஜக தலைமை எ.முருகனை மத்திய இணை அமைச்சர் ஆக்கியது. அண்ணாமலையை மாநிலத் தலைவர் ஆக்கியது. எல்,முருகன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவாவார் என்று பரவலாக பேச்சு அடிபட்ட நிலையில் அதிமுகவை நம்பி மாநிலங்களவை உறுப்பினர் ஆக முடியாத சூழல் உள்ளது.

மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் மாநிலங்களை உறுப்பினராகவாவது இருக்க வேண்டும். எனவே மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் தெரிவு செய்து முருகனை மாநிலங்களவைக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

Exit mobile version