அழகிய தீவுகளைக் கொண்ட அமைதிப் பிரேதமான லட்சத்தீவுகளை சுற்றுலா வணிகத்திற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக அங்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஃபுல் படேலை நியமித்தது. இவர் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் மோடி அமித்ஷாவின் வலதுகரமாக செயல்பட்டவர். இவர் லட்சத்தீவில் 4 சட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறார். நான்கும் அடக்குமுறைச் சட்டங்கள்.
இந்நிலையில் இதற்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தன. பிரஃபுல் படேலை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் கேரள மாநில அரசு மக்கள் கோரிக்கை. மத்திய அரசோ லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இருக்கும் தொடர்பை துண்டித்து லட்சத்தீவுகளை கர்நாடக மாநிலத்தோடு இணைக்கும் வேலையை செய்துள்ள நிலையில் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், கேரள மாநில கங்கிரஸ் எம்பிக்கள் லட்சத்தீவு செல்ல முயன்ற போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போன்று இப்போது கேரள மாநில இடதுசாரி எம்பிக்களுக்கும் தடை விதித்துள்ளது.