ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மேற்குவங்கம், கேரளம் , அஸ்ஸாம் மாநிலங்களில் ஆளும் கட்சிகளே வென்றுள்ளது. கேரள மாநிலத்தில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. 95 தொகுதிகளை வென்றுள்ள பினராயி விஜயன் முதல்வராகிறார். ஆட்சியைப் பிடிக்க போராடிய காங்கிரஸ் 44 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாகி உள்ளது. கடந்த முறை 1 தொகுதியில் வென்ற பாஜக இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படு தோல்வியை தழுவியுள்ளது.