Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாஜகவுக்கு சேவை செய்யும் முஸ்லீம் தலைவர் ஓவைசி!

இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மை வாக்காளர்களால் ஒரு போதும்  அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாது என்பது இப்போதைய தேர்தல் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெரும்பான்மை வாக்குகளை ஒரு வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் சில தொகுதிகளில் மட்டும் இஸ்லாமியக் கட்சிகளால் வெற்றி பெற முடியும். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய சில தொகுதிகளில் மட்டும் வெல்ல முடியும் என்ற நிலையை புரிந்து கொண்டு பெரும்பான்மை தொகுதிகளில் முஸ்லீம்களின் வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு சேவகம் செய்வதே ஓவைசி போன்றோரின் நோக்கம்.

உத்தரபிரதேச தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நூறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போகிறோம். என்று அறிவித்து விட்டார் ஓவைசி. இவரால் 50 தொகுதிகளில் வெல்ல முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. 25 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது. ஆனால்  சமாஜ்வாதி,காங்கிரஸ் கட்சிகளுக்குச் செல்லும் கணிசமான வாக்குகளைப் பிரித்து விடுவார் எளிதாக பாஜக வென்று விடும்.

ஓவைசி முஸ்லீம்களுக்கு தலைவராக இருக்கிறார். ஆனால் இவர்களைப் போன்றோரால் முஸ்லீம்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது. இவர் போன்றோரை பாஜக ஒரு போதும் தண்டிக்கவோ சிறையில் தள்ளவோ செய்யாது. பாஜக போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் வெல்ல ஓவைசி போன்றவர்கள் மிக மிக அவசியம் தேவைப்படுகிறார்கள்.

Exit mobile version