Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னாவில் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு!

இந்தியா இந்து அடிப்படைவாத தேசமாக உருவாகி விட்டதைப் போன்று பாகிஸ்தான் முஸ்லீம் அடிப்படை  வாத தேசமாகி வருகிறது. இந்தியாவில் காந்தியின் கொள்கைகளை ஏற்காதவர்களே அவரை தேசத் தந்தை எனப் புகழ்வார்கள். உதாரணத்திற்கு காந்தியை ஏற்காத அம்பேத்கரும் பெரியாரும் காந்தி கொல்லப்பட்ட போது துடித்துப் போனதைப் பார்க்க முடியும்.

இந்தியாவில் காந்தி போன ஜின்னாவை பாகிஸ்தான் மக்கள்  தேசத்தந்தை என்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும்  அடிப்படைவாதம் வளர்ந்து வருகிறது.’

பாகிஸ்தானின்  பலூசிஸ்தான் மாகாணத்தின் தென் மேற்கு கடலோரத்தில் குவாடர் என்ற பகுதியில் பாகிஸ்தான் சுதந்திரத்திற்காக போராடிய ஜின்னாவில் சிலை உள்ளது. இந்த சிலை முழுவதுமாக வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.  இந்த சிலை உடைப்பிற்கு பலூச் விடுதலை முன்னணி உரிமை கோரியுள்ளது. இது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். பாகிஸ்தானில் அதிக பதட்டம் நிறைந்த மாகாணம் பலூசிஸ்தான்.

ஜின்னா-காந்தி- போன்றோர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்  அவர்கள் மக்கள் நலன்களுக்காகவே செயல்பட்டார்கள். இன்றைய மத அடிப்படைவாதம் அனைத்துமே கடும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறது.

பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  கடந்த வாரம், பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.  2 பேர் காயமடைந்தனர்.

Exit mobile version