Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பத்து ஆண்டு கால ஆட்சி என்பதால் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது:ராகுல்

rahulஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு சில தவறுகள் செய்திருக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளது. இது குறைவான காலம் அல்ல. நீண்ட காலம். எனவே, ஆட்சிக்கு எதிரான அலை இருப்பது உண்மைதான்.

ராகுல் காந்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும் போது இதை தெரிவித்தார். அதேவேளையில் ஏராளமான பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளதாக கூறினார். மேலும் தேர்தலுக்கு பின் என்னை பிரதமராக தேர்ந்தெடுத்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். புதிய மாற்றங்களை கொண்டு வரும் அரசாக என் தலைமையிலான அரசு இருக்கும் என கூறினார்.

கடந்த பத்துவருட ஆட்சி மட்டுமல்ல காப்ரட்டுகளால் ஆளப்படும் இந்திய அரசே பாரதீய ஜனதா போன்ற மத அடிப்படைவாதிகளை உருவாக்ககக் காரணாமாக இருந்தது. இந்துத்துவ பாசிசத்தை உருவாக்க காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பங்களிப்பே இன்று மோடியை பிரசவித்திருக்கிறது. இவற்றை ராகுல் உணர்ந்துகொள்ளாவிட்டாலும் மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

மோடி பற்றிக் கூறிய ராகுல், தகவல் பெறும் உரிமை சட்டத்தையும் கொண்டு வருமாறு குஜராத் அரசுக்கு கோர்ட்டுகள் உத்தரவிட்டு வருகின்றன. குஜராத்தின் காவலாளி என்று தன்னை ஒருவர் சொல்லிக்கொள்கிறார். இந்த நாட்டுக்கு ஒரு காவலாளி தேவை இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காவலாளி ஆக்குவதே எங்கள் விருப்பம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Exit mobile version