Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பட்டினிச்சாவுகள் சோமாலியாவோடு போட்டி போடும் மோடி அரசு!

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

2017-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நிதி ஆயோக் 2021-ஆம் ஆண்டு வறுமை இல்லாத நாடாக இந்தியா உருவாகும் என்றது. இதை மோடியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இடையில் கொரோனா வந்தது இந்திய மக்கள் ஓட்டாண்டிகள் ஆனார்கள். ஆனால், இந்திய கோடீஸ்வர்களின் சொத்து மதிப்பு இந்த கொரோனா காலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்தது.

முகேஷ் அம்பானி (8,450 கோடி டாலர்), கவுதம் அதானி (5,005 கோடி டாலர்), ஷிவ் நாடார் (2,350 கோடி டாலர்), ஆர் கே தமானி (1,650 கோடி டாலர்), உதய் கோடக் (1,590 கோடி டாலர்), லட்சுமி மிட்டல் (1,490 கோடி டாலர்), குமார் மங்களம் பிர்லா (1,280 கோடி டாலர்), சைரஸ் பூனாவாலா (1,270 கோடி டாலர்), திலிப் சாங்வி (1,009 கோடிடாலர்), சுநீல் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் (1,005 கோடி டாலர்)

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரிக்கத்து வரும் நிலையில் பட்டினியால் சாகும் மக்கள் எண்ணிக்கையில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை நாடுகள் கூட இந்தியாவை விட ஒரு படி மேல் இருக்கிறது. பட்டினியால் சாகும் பட்டியலில் கடைசி இடம் சோமாலியாவுக்கு  116-வது இடம்.

இன்னும் ஓராண்டில் மோடியின்  புண்ணியத்தில் நாம் சோமாலியாவை முந்தினால் அதிவே பெரிய ஆச்சரியமாக இருக்கும். காரணம்  கடந்த ஆண்டு 94-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 101-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. சோமாலியாவின் சாதனையை முறியடிக்க பாஜகவுக்கு வாழ்த்துக்கள்!

Exit mobile version