ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களை எதிர்த்து வந்தது. முன்னர் ரஷ்ய ஆக்ரமிப்பிற்கு எதிராகவும் இந்த முன்னணி போராடி வந்த நிலையில், இந்த பஞ்ச்சீர் பகுதியை தேசிய எதிர்ப்பு முன்னணியை வீழ்த்தி கைப்பற்றுவதற்காக தலிபான்கள் படைகளை அனுப்பி விட்டனர்.
பஞ்ச்சீர் பகுதியை தலிபான்கள் சுற்றி வளைத்த நிலையில் மதத்தலைவர்கள் அறிவுரைப்படி தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தது தேசிய எதிர்ப்பு முன்னணி ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத தலிபான்கள் பஞ்சசீரை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர்.ஆனால் பஞ்ச்சீர் பகுதியை விட்டு தலிபான்கள் வெளியேறி வேண்டும் என்று தேசிய எதிர்ப்பு முன்னணி அறிவித்துள்ளது.