Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோர்வே, அமரிக்கா, பிரித்தானியா, செஞ்சிலுவைச் சங்கம் சரணடைவு முயற்சியில் : புலிகள் வஞ்சிக்கப்பட்டனர்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஊடாக 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே அரசின் மிளறிக்கை தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதன செயலகத் தலைவர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமரிக்க பிரித்தானிய தூதரகங்களுடனும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடனும் 2009 ஆம் ஆண்டு மே 17க்கும் 18க்கும் இடையிலான இரவு வேளையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுடனும் அவர்கள் தொடர்புகொண்டனர். இதன்போது அவர்கள் இறுதிநேர சரணடைதலுக்கு இணக்கம் தெரிவித்தனர்.
சரணடைவதற்குச் சற்று முன்பதாகக் கூட தாம் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவ முன்னரங்கங்களுக்குச் செல்வதாக பசில் ராஜபக்சவிற்குத் தொலை பேசியில் அறிவித்த பின்னரே சென்றனர்.
சரணடைவதற்குச் சற்று முன்பதாகக் கூட தாம் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவ முன்னரங்கங்களுக்குச் செல்வதாக பசில் ராஜபக்சவிற்குத் தொலை பேசியில் அறிவித்த பின்னரே சென்றனர்.
அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக மேலும் அறிக்கை தெரிவிக்கிறது.
புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பிரபாகரன் இன்னமும் உயிரோடு வாழ்கிறார் என்ற பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து சமூக விரோதக் குழுக்கள் பணம் பறித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version