Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோர்வேயில் பயங்கரவாதத்தாக்குதல் : நோர்வே நக்கீரா

கிட்லரிடம் இருந்து நோர்வே விடுபட்டபின் இதுவரை கண்டிராத துவேச, நாசிய பயங்கரவாதக்குண்டு வெடித்தாக்குதல் நேற்று வெள்ளி 22.07.2011 மாலை 3:25 மணியளவில் நடந்தேறியது. தாக்குதல் நடந்த இடம் போர்களமாகவே காணப்படுகிறது. இத்தாக்குதலானது நோவேயிய பிரதமமந்திரியான யன்ஸ் ஸ்தொல்தன் பர்க்கையும், நீதியமைச்சரான குனுத் ஸ்தூர்பர்கையும், தொழிட்கட்சியையும் குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. பிரதமமந்திரியின் வாசல்தனமானது நீதியமைச்சரகத்துடன் இணைந்தே இருந்தது. இந்த நீதியமைச்சின் கீழ்தான் இன்று குடிவரவு குடியகல்வு ஆணையகம் (Imigration) இயங்கி வருகிறது.

(நீதிஅமைச்சர், பிரதமர்)

இந்தக் குண்டு வெடிப்பின் காரணமாக பிரதமமந்திரியின் வாசல்தலத்தைச் சுற்றியுள்ள அமைச்சரகங்கள் சிதறடிபட்டுள்ளன. கண்ணாடிகள், தடளபாடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது ஏற்பட்ட சத்தம் ஒஸ்லோவுக்கு வெளியிலும் கேட்டுள்ளது. இத்தாக்குதலை அனுபவித்துவர்களின் கூற்றுப்படி பூகம்பம் நடந்தது போல் உணரப்பட்டுள்ளது.

இது ஒரு கார்குண்டுத்தாக்குதல் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது. காரணம் தாக்குதல் நடந்த இடத்தில் ஒரு கார் சின்னாபின்னமாக்கப்பட்டு எரிந்த நிலையில் உள்ளது.

எப்படி இது நடந்தது என்பதைப் பற்றிச் சிந்திக்குக் கூடிய நேரகாலம் பொலிசுக்கு இல்லை. காயப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும், சிகிச்சை அழிப்பதும், இறந்தவர்களை அகற்றி உறவினர்களுக்கு அறிவிப்பதுமே தற்போதைய தேவைஎனப் பொலிஸ் கருதுகிறது.

இன்னுமொரு தொர்ச்சியான புதியதாக்குதல்

(உத்தஒய்யா தீவில் நடந்த கோரச்சம்பவத்தின் காட்சிகள் சில)

இவனிடம் இருந்து தப்புவதற்காக கடலினுள் பாய்தவர்களும், குன்றுகளின் பின்னால் ஒளித்தவர்களும் தமது சோகத்கதையை தொ.காட்சிக்கு அளித்தனர்.

கொலைகாரப்பாதகனின் பின்புலம்

இவன் 2006ம் ஆண்டு முன்னேற்றக்கட்சி (பிரெம்கிறிஸ் பாட்டி- FRP) அல்லது எவ்ஃ.ஆர்.பி (FRPUP)அரசியற்கட்சியின் இளையோர் அமைப்பில் இருந்தான். இக்கட்சி வெளிநாட்டவர்கள், முக்கியமாக கறுப்பினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மேல் துவேசட்தை மறைமுகமாக வளர்க்கும் செயற்பாடுகளைக் கொண்டது. பெருந்தொகையான வெளிநாட்டவர்களின் வருகையும், இக்கட்சியின் அபரீதமான வளர்ச்சியின் ஒருவடிவம் தான் இது என்று கருதமுடிகிறது. குசி கட்சியின் வெளிநாட்டவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிரான போக்குப் போதாது என்பது அவனுடைய கருத்தாக இருந்தது.

முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள இவன் பள்ளிக்காலங்களில் ஒரு இஸ்லாமியனுடன் தான் கூடித்திரிவதும் உடற்பயிற்சி செய்வதும் வளக்கம். இவன் படிப்பறிவு கொண்டவனாகவும், விவசாயியாகவும், தன்னை தேசியவாதியாகவும் வகுத்துக் கொண்டான். பிரேவீக் கியோபார்ம் (Anders Behring Breivik) என்ன ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து மரக்கறிகளையும், தாவரங்களையும், நல்மரங்களையும் உருவாக்கும் நிறுவனமாகவே அதை வரையறுத்தான். இதனுடைய பின்புலம் எப்படி அமைந்தது என்பதை பொலிஸ் அறியமுயல்கிறது.

இவன் ஒரு விவசாயியாக இருப்பதனால் போதியளவு உரம் போன்ற இரசாயணப்பொருட்களை வாங்குவதற்கு அனுமதி உடையவனாவான். இந்த இரசாயண உரங்களைப் பயன்படுத்தியே இந்த வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது ஊகமாகிறது. இவன் மே மாதம் 4ம் திகதி 6தொன் நிறைகொண்ட இரசாயண உரத்தை வாங்கியுள்ளான்.

இவன் தனது இணையத்தளத்தில் துவேசம் கலந்திருப்பது அறியப்படுகிறது. அதில் அவன் குறிப்பிட்ட வியக்கத்தகு வசனமானது ‘ஒரு தனிமனிதனின் பெருங்செயல் 1000 பேரின் கவனத்தை ஈர்க்கும்’ இதைச் செய்தும் காட்டியுள்ளான். புதிய போர்முறைகள் பற்றிய வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதில் இவனுக்கு அலாதிப்பிரியம். இப்போது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் வீடியோ விளையாட்டுக்கள் வளர்ந்த, படிப்பறிவுள்ள மனிதர்களையே சுயசிந்தனை இழக்கச் செய்கிறது என்றால் தமிழ்பெற்றோர்களே தயவுசெய்து உங்கள்பிள்ளைகளின் வீடியோ விளையாட்டை தயவுசெய்து கண்காணியுங்கள். நாளை இந்தப்பாதகன் போன்றபிள்ளைகள் எம்குலத்தில் உருவாகக்கூடாது

துவேசக்கட்சியான குசியும் தொழிட்கட்சியும் வெளிநாட்டவர்கள் பற்றிய முரணான அரசியல் கருத்தியலைக் கொண்டவை. அதுமட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கான வலதுசாரித் தீவிரவாதத்தையும், துவேசவாதத்தையும் நோவேயிய பொலிஸ் ஏறக்குறைய அழித்ததன் காரணமாக இவர்கள் தலைதூக்கி ஆடமுடியாத நிலையில் ஒருசிலர் சேர்ந்து இந்தத்தாக்குதலைச் செய்திருக்கிறார்கள் என்பது ஊகம். இதற்கு முக்கிய காரணமான துவேசம் பேசும் கட்சிகளும், துவேசத்தைத் தூண்டும் வண்ணம் எழுதும் ஊடகங்களும் இதன் பொறுப்புகளை ஏற்கவேண்டும்.

மீண்டும் ஒருவன் இன்று கைது.

ஊகங்கள்

இவனுடன் இன்னும் பலர் இயங்கிவந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். நோர்வேயிய வலதுசாரித் தீவீரவாதிகளும், தேசியவாதிகளும் பொலிசாரின் திறமையால் அடக்கப்பட்டார்கள் என்பது பொலிசின் பக்கமிருக்கும் நற்செயற்பாடு என்பதை எந்த வெளிநாட்டவரும் மறக்கலாகாது.

தாக்குதல் முடிவு

முக்கியகுறிப்பும், உலகம் படிக்க வேண்டிய பாடமும்

ஊடகங்களும் தங்கள் பங்குகிற்கும், பணம் பண்ணலுக்கும், செய்தி நிரப்பலுக்குமாக ஊதித்தள்ளும் செய்திகள் இப்படியான சம்பவங்களுக்குக் காரணமாகிறது. தேசியவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைவரும் குறுகிய நோக்கமுள்ளவர்களாகத்தானே காணப்படுகிறார்கள். எது தேசியம்? பிறக்கும் போது கொண்டு வந்தீர்களா? போகும் போது கொண்டு தான் போகப்போகிறீர்களா? மக்களாய், மனிதர்களாய், மனிதநேயத்துடன் வாழமுடியாதவர்களை மானிடர் என்பதே அவமானம் ஆகும்.

ஐரோப்பாவில் கிட்லர் என்ற அரக்கன் ஜனநாயகத்தேர்தலில் தம்மக்களின் நலனை காட்டியே ஆட்சிக்கு வந்தான். ஆரியச்சாதியின் பெருமைகளை நிலைநிறுத்தி ஆயிரமாயிரமாகக் கொன்று குவித்தான். வளர்த்த காடாவே மார்பில்பாய்ந்ததை ஜேமனியமக்கள் உணர்ந்தனர். ஆரியம்பற்றிப்பேசிய கிட்லர் அவன் கூறிய அதே ஆரியத்துக்குரிய தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால் தன்னைத் தானே வெறுத்தானா? அதை மறைக்கத்தான் யூதர்களைக் கொன்று குவித்தானா? அவன் அழித்துத் தள்ளிய, வெறுத்து ஒதுக்கிய யூதர்தான் இவனுடைய பேரன். இவனுடைய அரசியல் யதார்த்தம் என்பது என்ன? தன்பேரனால் துர்பிரயோகம் செய்யப்பட்டகாரணத்தினால் யூத இனத்தையே கிட்லர் எனும் அரக்கன் அழிக்கத்துணிந்தான் எனும்போது இவனது அறிவையும் புத்திக் கூர்மையையும் என்னவென்று நாம் துணிவது. இவன் தன்பேரனை கொன்று பழிதீர்த்திருந்தால் கூட இவனை உலகம் மன்னித்திருக்கும்.

வளர்த்தகாடா மார்பில் பாய்ந்த கதைகள் எமது நாட்டிலும் நடந்தன. சிறீமா தன் அரசியல் நலன்களுக்காக வளர்த்துவிட்ட செகுவேராவே அவருக்கு எதிராகப்பாய்ந்தது. அதனால் அவரே அவர்களை அழித்ததும், தன்னித்தைக் கொன்றுதள்ளியது எம்மால்; மறக்கவியலாது? தமரசியல் இலாபத்துக்காக இளைஞர்களை உசுப்பிவிட்டுப் புலியான இளைஞர்களால் அதே கூட்டணித்தலைவர்கள் கொல்லப்பட்டார்களே இதை நாம் மறக்கலாமா? எம்மை முள்ளிவாய்கால்வரை தள்ளிச் சென்றது என்ன? சிந்தியுங்கள் வாசகர்களே? மனிதநேயம் தவறி சொல்லும் எந்த ஒரு வார்த்தையோ, நடக்கும் எந்த ஒரு செயற்பாடோ இறுதியில் உங்களுக்கு இயமனாகும் என்பதை யாரும் மறக்கலாகாது. இது மதங்களுக்கும் பொருந்தும்.

2ம் உலகயுத்தத்தில் கிட்லரின் தோழனான நோவேயிய கிவிஸ்லிங்கும் இப்படியே உருவானான். இவ்வளவையும் அறிந்தும், படித்தும் கொண்ட அரசியல்வாதிகளும், ஊடகங்களும் துவேசம் பேசுவதையும் குறிப்பிட்ட நிற, மத மக்களுக்கெதிராக தமது வார்த்தைகளால் மக்களை ஏவிவிடும் அசிங்கமான நாகரிகமற்ற செயல்களை இன்னும் நிறுத்தவில்லை என்பது வெட்கித் தலைகுனியவேண்டிய விடயமாகும். இந்தத் துக்கரமான செயலுக்குக் காரணமான, கொடுமையான அரக்கனான அன்டர்ஸ் பிரேவிக் எப்படி உருவானான்? யாரால் தூண்டப்பட்டான்? காரணம் என்ன? இவற்றை ஆய்வுறும் போது மனிதநேயம் மறந்து வோட்டுகளுக்காக வெற்று வார்த்தைகளால் வேட்டுப்போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களுமே காரணமாவர்.

உண்மைச் செய்திகளுடன் உங்களின் நோர்வே நக்கீரா
Exit mobile version