கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் சிக்கி தமிழக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களை மீறி எவரும் தமிழகத்தில் தொழில் செய்யவோ சுதந்திரமான கருத்துச் சொல்லவோ எழுதவோ முடியாத நிலையில் உமசாங்கர் என்னும் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டு வந்தவர் இந்த உமாசங்கர். ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலைச் செய்த செல்வகணபதி என்னும் ஊழல் பெருச்சாளி இப்போது கருணாநிதியின் கட்சியில் இணைந்து விட்டது. இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவில் அரசு கேபிள் தொலைக்காட்சியை தொடங்க கருணாநிதி உத்தரவிட்டு அதற்கு பொறுப்பாக உமாசங்கர் நியமிக்கபப்ட்டார். இப்போது சண்டையிட்ட கருணாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விட நேர்மையான அதிகாரியான உமாசங்கரோ கருணாந்தி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். தான் பழிவாங்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்த நிலையில் நேற்று திடீரென அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளார் கருணாநிதி. இது பற்றிய விரிவான கட்டுரை
கருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரி – ஆகாஷ்.
https://inioru.com/?p=13989
