புலிகள் அமைப்பின் கஸ்ரோ குழுவை மையமாககொண்டு உருவான பிளவின் பின்னர் அக்குழுவினரால் புலிகள் இயக்கத்தின் வேலைகளுக்காக நோர்வே நாட்டிற்கு அனுப்பப்பட்ட நெடியவன் கைதாகியுள்ளதாக புலி சார் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் குற்றப் புலனாய்வித் துறையினர் நெடியவனுக்கு எதிராக நோர்வே நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் பின்னர் இவர் கைதுசெய்யப்பட்ட்தாக அச்செய்திகள் தெரிவித்தன. இதே வேளை இச் செய்தி தவறானது என மற்றொரு புலிசார் இணையம் மறுப்பு வெளியிட்டுள்ளது. கைது குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இலங்கை அரசின் சதித்திட்டம் அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. புலிகளின் புலம்பெயர் கூறுகளிடையே ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாட்டின் எதிர்விளையே செய்திகளின் அடிப்படையாக அமைகின்றன எனப் பரவலான கருத்து நிலவுகிறது.