பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள இந்தியாவின் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் ஓரளவு ஏழை மக்களின் வாழ்வுக்கு உதவியாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் வயல் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை எனவே நூறு நாள் வேலைத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் அறிவித்திருந்தார். இதே கருத்தை பாஜகவினரும் கூறியுள்ள நிலையில் நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்திற்கான நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகிறார்கள். இதனால் நவம்பர் 1-ஆம் தேதிவரி ஊதியமாக வழங்க வேண்டிய 1178 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்காத காரணத்தால் மக்கள் நகரங்களை நோக்கி குடியேறுவதகாவும் சுட்டிக் காட்டியுள்ள முதல்வர்.
தமிழ்நாட்டில் 92.31 லட்சம் குடும்பங்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்து வேலை கேட்டிருப்பதாகவும் இதுவரை 63.35 லட்சம் பேருக்கு மட்டுமெ வேலை வழங்கப்படுவதாகவும் அவர்களுக்கும் ஊதிய நிலுவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாகவும் 273 ரூபாய் ஊதியத்தை 300 ஆகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம் என்று அறிவித்த நிலையில் அதையும் வலியுறுத்தியுள்ளார்.