மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோவிலுக்குள் இதுவரை பட்டியலின மக்கள் நுழைந்ததில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவையடுத்து அக்கோவிலுக்குள் நுழைந்து பட்டியலினத்தவர்கள் வழிபாடு நடத்தியுள்ளார்கள். ஆனால் இந்த கோவிலின் பூசாரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்தான் அவர், வழிபாடு செய்ய வந்த பட்டியலின மக்களுக்கு புஜை செய்ய மறுத்து விட்டார்.
கொக்குளம் கிராமத்தில் உள்ள அருள் மிகு கருப்பணசாமி கோவில் உள்ளது. கொக்குளம் கிராமத்தில் பெரும்பான்மை மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பைச் சேர்ந்த தேவர்சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இதே ஊரில் 15 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலானது கொக்குளத்தைச் சேர்ந்த ஆறு பங்காளிகளான 1. வெறியத் தேவர், 2, கட்டபின்ன தேவர், 3. கறுப்பத் தேவர், 4. சடச்சித் தேவர், 5. சேத்துரான் தேவர், 6. கன்னித்தேவர் ஆகியோர் சேர்ந்து அவர்களது இடத்தில் கட்டினர். பின்னர் இந்தக் கோவிலைச் சுற்றி சுவரும் கட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. காலங்காலமாக இக்கோவிலின் வெளியில் நின்றுதான் பட்டியலின மக்கள் சாமி கும்பிடுவது வழக்கம்.
இக்கிராமத்தில் வழிக்கும் பட்டியலின குடும்பங்களில் ஒரு பங்காளி வகையறாவை மட்டும் கொவிலுக்குள் அனுமதித்து விட்டு ஏனையோரை கோவிலுக்கு வெளியில் நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் வழிபடும் உரிமை கோரி பட்டியலினத்தவர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உயர்நீதிமன்றம் பட்டியலினத்தவர்களும் வழிபாடு செய்யலாம் என உத்தரவிட்டனர். இதனையொட்டி கடந்த ஜூலை 30-ஆம் தேதி பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய போது கோவில் பூசாரி முத்தையா வழிபாடு செய்ய மறுத்து விட்டார்.
“நானும் பட்டியலினத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால், என் வீட்டுப் பெண்கள்கூட இந்தக் கோவிலுக்குள் வந்து வணங்க அனுமதி இல்லை. அவர்கள் வெளியில் நின்றுதான் வணங்குவார்கள். அப்படியிருக்கும்போது, வழக்கத்தை மீறி நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவர்கள் உள்ளே வந்து வணங்குகிறார்கள். அதனால், என் கையால் விபூதி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
நீண்டகாலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்த கோவிலுக்குள் தலித்துக்கள் சென்று வழிபாடு நடத்தியதை தலித் மக்கள் மிகப்பெரிய வெற்றியாக பார்த்தாலும் இது தேவர் vs தலித் முரண்பாடுகளை இப்படுகுதியில் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.