நீட் என்னும் தேர்வே அநீதியான மோசடியான தேர்வு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த தேர்வு நடைபெறும் போதும் பல விதமான மோசடிகள் வெளியாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வுகளில் வரலாறு காணாத மோசடிகள் நடந்துள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக நீட் தேர்வு வினாத்தாள்கள் பணம் படைத்த மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு ஆள் மாறாட்டம், போலி முகவரி கொடுத்து நீட் தேர்வு எழுதுவது என பல விதமான மோசடிகள் நடந்துள்ளது.
இந்தியா முழுக்க நீட் தேர்வுக்கு எதிரான மன நிலை பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேச மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிரான மன நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.