Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீட் தேர்வு ஏ.கே. ராஜன் குழு அறிக்கை சொல்வது என்ன?

2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை தமிழகத்தின் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் எதிர்த்த நிலையில் நீட் தேர்வு உருவாக்கியுள்ள பாதகங்கள் தொடர்பாக ஆராயா நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. இப்போது அந்த அறிக்கை பொது மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கூறும் தகவல்கள் மிக முக்கியமானவை. இந்த குழு நேரடியாகவும் மறைமுகமாகவும் 86 ஆயிரத்து 342 பேரிடம் நீட் தொடர்பான கருத்துக்களைக் கேட்டது. இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,453 பேருக்கு கருத்து இல்லை. 916 பேர் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளையே திரும்ப அனுப்பியிருந்தார்கள்.

அதன் அடிப்படையிலும் அரசின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலும்  அறிக்கை சமர்ப்பித்து அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி சிறப்பு சட்ட வரைவை தமிழ்நாடு அரசு உருவாக்கி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

நீட் தேர்வு தாய் மொழியில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன்மைகளை கணக்கில்கொள்ளவில்லை.

நீட் தேர்வின் தேர்ச்சி கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது

நீட் தேர்வு கற்றல் என்ற முறைக்குப் பதிலாக மதிப்பெண் தேர்ச்சி என்ற முறையைக் கொண்டிருக்கிறது

நீட் தேர்வானது கலாசார ரீதியாக, பிராந்திய ரீதியாக, மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது.

நீட் தேர்வு அமலாவதற்கு முன்பு தமிழ்நாடு கல்வித்திட்டத்தின் கீழ் பிளஸ் டூ படிப்பின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலவிச் சேர்க்கை நடந்து வந்தது. நீட் தேர்வுக்குப் பின்னர் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்யும் குடும்ப வருவாய் உள்ள மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் நிலை உள்ளது.

அரசுப்பள்ளிகளில் பயின்று கிராமப்புறங்களில் இருந்து வந்து  மருத்துவம் படிக்கிறவர்கள் கிராமப்புறங்களில் பணி செய்கிறவர்கள் .ஆனால் நீட் தேர்வில் தெரிவாகிப் படிக்கும் மாணவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலேயே பணி செய்வார்கள்.

நீட் தேர்வு பழங்குடிகள், கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கிறது.

இப்படி பல்வேறு கருத்துக்களை அடுக்கிய ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வானது பாரபட்சமான நடைமுறைகளைக்கொண்டிருக்கிறது, சமூகங்களின் பிரதிநித்துவத்தை குலைக்கிறது. நீட் தேர்வால் முதல் தலைமுறை கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் பாதிக்கப்படுகிறார்கள். என்று கருத்தை முன் வைத்த குழு  பல்வேறு பரிந்துறைகளை முன் வைத்தது.  அது அனைத்தும் நீட் தேர்வை அப்புறப்படுத்துவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு அரசு துவங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது.

Exit mobile version